பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் இளையராஜா. மனோஜ் காலமானபோது உடல்நிலை காரணமாக இளையராஜாவால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரம் தனது இரங்கலைத் தெரிவித்து இருந்தார். பாரதிராஜாவும், இளையராஜாவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி. அவ்வப்போது சண்டையும் போட்டுக் கொள்வார்கள்.
அதன்பிறகு சமாதானமும் ஆவார்கள். நட்பும் பாராட்டுவார்கள். இளவயது மனோஜ் காலமானது இளையராஜாவுக்கு மட்டுமல்ல. திரையுலகிற்கே பேரதிர்ச்சிதான். நல்லா ஜாலியா பேசுற பையன் மனோஜ்னு சொல்வாங்க. அவனுக்கா இந்த நிலைமை?
பைபாஸ் சர்ஜரிதான் காரணமா? என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல. நிறைய மன அழுத்தம் இருந்ததாகவும் சொல்றாங்க. எதையோ எங்ககிட்ட மறைச்சிட்டான். நாங்கதான் கவனிக்காம விட்டுட்டோம் என்கிறார் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ்.
இந்நிலையில் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் இசை அமைப்பாளருமான இளையராஜா திருவண்ணாமலைக்கு வழிபட சென்ற போது அங்கே மனோஜின் ஆத்மா சாந்தி அடைவதற்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.
பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்து விட்டால் அந்தப் படம் சூப்பர்ஹிட் தான். இப்படி ஒரு படமா? என்பார்கள். அந்தளவு ரசிக்கும் வகையில் இசையும், பாடல்களும் இருக்கும். இதற்குப் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என அனைத்துப் படங்களும் சூப்பர்ஹிட்தான்.