நான் மனதார மிகப்பெரிய நடிகர்களாக ஏற்றுக் கொண்டது இவ்விருவரைத் தான்… நடிகர் சிவக்குமார் பகிர்வு…

By Meena

Published:

பழம்பெரும் நடிகர் சிவக்குமார் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையாவார். சிவக்குமார் அவர்கள் தீவிர முருகப்பெருமானின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

1965 ஆம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவக்குமார். ‘சரஸ்வதி சபதம்’ (1996), ‘கந்தன் கருணை’ (1997), ‘திருமால் பெருமை’ (1968) போன்ற பக்தி படங்களில் நடித்து பிரபலமானார் சிவக்குமார். இளம் வயதில் முருகன் தோற்றத்தில் இவர் நடித்தது அந்த முருகனே நேரில் வந்தது போல் இருக்கும் என்று கூறுவர்.

‘அன்னக்கிளி’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘வண்டிச்சக்கரம்’, ‘இன்று நீ நாளை நான்’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் சிவக்குமார். பிலிம்பேர் விருதுகள், மாநில திரைப்பட விருதுகள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவர்.

சிவக்குமார் தனது தொழில் வாழ்க்கையில் எம்.ஜி.ராமச்சந்திரன் , சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , எஸ்.எஸ்.ராஜேந்திரன் , ஆர்.முத்துராமன் , ஏவிஎம் ராஜன் , ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் , கமல்ஹாசன் , ரஜினிகாந்த் , விஜயகாந்த் , சத்யராஜ் , உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் ராதிகாவுடன் இணைந்து சித்தி , அண்ணாமலை போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

பல நடிகர்களுடன் ஒன்றாக பணியாற்றிய, பல்வேறு அனுபவங்களைக் கொண்ட சிவக்குமார் அவர்கள் ஒரு நேர்காணலில் நான் என் வாழ்நாளில் பார்த்த என் மனதார நான் மிகப்பெரிய நடிகர்களாக ஏற்றுக் கொண்டது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் உலகநாயகன் கமல்ஹாசனையும் தான் என்று பகிர்ந்துள்ளார்.