பழம்பெரும் நடிகர் எம். ஆர். ராதாவின் மகன் தான் நடிகர் ராதாரவி. இவரின் முழுப்பெயர் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் ரவி என்பதாகும். இவர் நடிகை ராதிகாவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ராதாரவி.
தமிழ்நாடு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்தார் ராதாரவி. பள்ளியில் படிக்கும் போதே நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ராதாரவி. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது ஜூலியஸ் சீசர் வேடத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
1980 ஆம் ஆண்டில் தனது சொந்த குழுவை வைத்து நடிகவேல் தியேட்டரை தொடங்கினார். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் ராதாரவி. பல வெற்றித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்ன தம்பி’, ‘உயர்ந்த உள்ளம்’, ‘அண்ணாமலை’, ‘உழைப்பாளி’, ‘இது நம்ம பூமி’, ‘அரண்மனை’, ‘ராட்சசன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதாரவி. இது தவிர தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் சிறப்பு விருது, சிறந்த குணச்சித்திர நடிகர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் ராதாரவி.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராதாரவி நடிகர் சூர்யாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் வக்கீலுக்கு படித்தவன், ஆனால் ஜெயபீம் படத்தில் வக்கீலாக சூர்யா அவ்வளவு நேர்த்தியாக நுணுக்கமாக நடித்ததைப் பார்த்து நானே அசந்து போய் விட்டேன் என்று கூறியுள்ளார் ராதாரவி.