மஹாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் குஷ்பூ. இவரது இயற்பெயர் நஹாத் கான் என்பதாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். திரையுலகில் 185 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் குஷ்பூ.
1980 ஆம் ஆண்டு இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் குஷ்பூ. தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ.
1988 ஆம் ஆண்டு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடித்து நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் குஷ்பூ. 80கள், 90களில் டாப் ஹீரோயினாக இருந்தவர் குஷ்பூ.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான இட்லிஉடன் இணைத்து குஷ்பூவின் தோற்றத்தை வைத்து குஷ்பூ இட்லி என்றே உருவாக்கினர்.ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளார்கள் என்றால் அது குஷ்பூவிற்கு மட்டும்தான். இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், அரசியலிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார் குஷ்பூ.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட குஷ்பூ. அண்ணாத்த படத்தில் நடிக்க டைரக்டர் என்னிடம் கதை சொல்லும் போது ரஜினி சார்க்கு நடிகை கிடையாது. அதனால எங்க கதாபாத்திரத்துக்கு வெயிட்டேஜ் இருக்கும்னு நானும் மீனாவும் நடிக்க ஒத்துக்கிட்டோம். பின்னர் ரஜினி அவர்களுக்கு ஜோடியா நயன்தாராவை கொண்டு வந்துட்டாங்க. அதனால கதையே மாறிடுச்சு. அப்புறமா அந்த படத்தில் ஏன்டா நடிச்சோம் அப்படினு நெனச்சேன் என்று கூறியுள்ளார் குஷ்பூ.