பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு இதுதான் தோணுது… காஜல் அகர்வால் ஓபன் டாக்…

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என…

kajal

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என பல பணிகளை செய்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதன் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படமும் வெற்றி பெற்றது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து நாயகனாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் Dragon திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் 34 கோடி என்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படத்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் தான் நடித்த இரண்டு படங்களிலுமே வெற்றி கண்டுள்ளார். அதை பற்றி நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வால் கூறியது என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் நல்ல இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகர். இந்த இளம் வயதில் அவர் நடித்த இரண்டு படங்களையுமே பிளாக்பஸ்டர் ஆக கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அவர் இயக்கிய முதல் படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அவரது வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிர்ந்து இருக்கிறார் காஜல் அகர்வால்.