இரண்டு வருஷமா தமிழ் சினிமால வாய்ப்பே வரல… சமந்தா ஓபன் டாக்…

சமந்தா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் சமந்தா. கல்லூரியில் படிக்கும்போதே நாயுடு ஹால் விளம்பரங்களில் நடித்து வந்தார் சமந்தா.…

samantha

சமந்தா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் சமந்தா. கல்லூரியில் படிக்கும்போதே நாயுடு ஹால் விளம்பரங்களில் நடித்து வந்தார் சமந்தா.

2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சமந்தா. பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இரண்டாம் நடிகையாக நடித்த புகழ் பெற்றார். 2012 ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சமந்தா.

தொடர்ந்து கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் சமந்தா. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கொண்டவர் சமந்தா.

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சமந்தா தமிழ் சினிமா பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால் தமிழ் சினிமாவில் நான் இறுதியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் தான் நடித்தேன். அதற்கு பிறகு இரண்டு வருடமாக எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரவே இல்லை. ஆனால் நான் நடிக்காவிட்டாலும் கூட தமிழ் பார்வையாளர்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். நான் நடிக்காவிட்டாலும் கூட அவர்கள் காட்டும் அன்பை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஓபனாக பேசியிருக்கிறார் சமந்தா.