தர்மதுரை படத்துல அழ மாட்டேன்னு அடம்பிடிச்சேன்… ஓபனாக பேசிய விஜய் சேதுபதி…

By Meena

Published:

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர்.

ஆரம்பத்தில் கூத்து பட்டறையில் கணக்களராக பணியில் சேர்ந்த விஜய் சேதுபதி அங்கேயே நடிப்பையும் கற்று தேர்ந்தார். ஆரம்பத்தில் பின்னணியில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தோன்றிய விஜய் சேதுபதி 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, நானும் ரவுடி தான், கருப்பன், 96, ரெக்க, விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் விஜய் சேதுபதி.

மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியா தோற்றத்திலும் என பல வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் விஜய் சேதுபதி. இவரின் மேடைப்பேச்சுகளுக்காகவே ரசிகர்கள் பலர் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, நான் அந்த படத்தில் அவே மாட்டேன் என்று தான் இயக்குனரிடம் அடம் பிடித்தேன். ஏனென்றால் ஐஸ்வர்யா இறந்து போற காட்சி வரும். அந்த கட்சியில் முதலில் இயக்குனர் அழ சொன்னாரு. நான் சொன்ன முதல் நாள் தான் நீதான் என் பொண்டாட்டின்னு நான் சொல்லிட்டு போயிருப்பேன் அவ இன்னிக்கு செத்துட்டா அவ மேல எனக்கு ரொம்ப கோபம் தான் வருது அழுக வரல அப்படின்னு அந்த சீன்ல அழ மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் உட்காரும்போது அப்போ நீ அழு அப்படின்னு இயக்குனர் சொன்னாரு. அப்போ நான் இந்த சந்தர்ப்பத்தில் என்னால் ஒரு உயிர் போயிடுச்சு நானும் சாகனும் அப்படின்னு தான் சார் எனக்கு தோணுது இப்போ எனக்கு அழுகை வரல அப்படின்னு அப்பவும் அழ மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கு அடுத்ததா வீட்டுக்கு போய் இருக்கும் போது பெத்த தாய் அம்மா வந்து நம்மள தொடும் போதுதான் அந்த நினைவு வந்து வெடித்து தேம்பி தேம்பி அழுகிற அந்த சீனு வரும் அப்படித்தான் அந்த படத்துல நிறைய இடத்துல இயக்குனர்கிட்ட அழ மாட்டேன் என்று அடம் பிடிச்சேன் அப்படின்னு ஓபனாக கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.