நான் நடிக்கிறதுக்கு ரூல்ஸ் கிடையாது… மனம் திறந்த நித்யா மேனன்…

நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பெரும்பாலும் தோன்றியவர். 1998ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா…

nithya menon

நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் பெரும்பாலும் தோன்றியவர். 1998ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நித்யா மேனன். அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நித்யா மேனன்.

அடுத்ததாக வெப்பம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உருமி, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் நித்யா மேனன். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பு இயல்பாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். தற்போது பல படங்களில் கமிட்டாக பிசியாக நடித்து வருகிறார் நித்யா மேனன். தனுஷ் உடன் இவர் நடித்த இட்லி கடை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது, நந்தி விருது பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றை வென்றவர் நித்யாமேனன்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நித்யா மேனனிடம் பத்திரிக்கையாளர் நீங்கள் படத்தில் நாயகியாக மட்டும்தான் நடிப்பீர்களா இல்லை சிறு கதாபாத்திரம் என்றாலும் நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நித்யா மேனன் எனக்கு கதை நன்றாக இருந்தால் போதும். நாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று நான் கூற மாட்டேன். எனக்கு கதையும் என் கதாபாத்திரமும் பிடித்தால் நான் நடித்து விடுவேன். நம்மை சுற்றி பிலிம்ஸ் இருக்கக்கூடாது படங்களை சுற்றி தான் நாம் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருக்கும் என்று பதில் அளித்திருக்கிறார் நித்யா மேனன்.