எனது மகன் பிரஷாந்த் வாழ்க்கையில் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பை இன்னைக்கும் நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்… தியாகராஜன் எமோஷனல்…

By Meena

Published:

தியாகராஜன் தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1981 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆகி, 1990 க்கு மேல் தயாரிப்பாளராகி, 2000 களில் இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையும், நடிகரும் இயக்குனருமான பேக்கடி சிவராமின் மருமகனும், நடிகர் விக்ரமின் தாய்மாமாவும் ஆவார்.

தொழிலதிபரான தியாகராஜன் 1981 ஆம் ஆண்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் நடிகர் ராதாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1982 ஆம் ஆண்டு ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படத்தில் நடிகராக நடித்தார். இப்படம் வெற்றிப் பெற்று தியாகராஜன் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து ‘கொம்பேறி மூக்கன்’, ‘நீங்கள் கேட்டவை’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவரது மகன் நடிகர் பிரஷாந்த். தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர். இளம் வயதிலேயே திரையுலகில் நடிக்க ஆரம்பித்தவர். தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து ‘ஆணழகன்’ என்ற படத்தை இயக்கினார்.

நடிகர் பிரஷாந்த் ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜோடி’, ‘ஜீன்ஸ்’, ‘வின்னர்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘பிரியாத வரம் வேண்டும்’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் பிரஷாந்த். 90 களில் உச்சத்தில் இருந்த பிரஷாந்த், 2000 களின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் கைகொடுக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை மணந்து கொண்ட பிரஷாந்திற்கு திருமண வாழ்க்கை கைகொடுக்காததால் மனமுடைந்து சினிமாவை விட்டு தள்ளி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் பிரஷாந்த்.

இதைப் பற்றி பேசிய தியாகராஜன், எனது மகன் பிரசாந்தின் திருமணத்தில் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். அவருக்கு நான் திருமணம் செய்து வைத்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சில நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது. அந்தத் தவறை நினைத்து இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார் தியாகராஜன்.