இனிமேல் இதை பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்… சிங்கம்புலி ஓபன் டாக்…

சிங்கம் புலி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் நடிகர் மற்றும் வசனகர்த்தா ஆவார். 2002 ஆம் ஆண்டு ரெட் திரைப்படத்தையும் 2005 ஆம் ஆண்டு மாயாவி திரைப்படத்தையும் இயக்கி பிரபலமானவர் சிங்கம் புலி. பிதாமகன்…

singampuli

சிங்கம் புலி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் நடிகர் மற்றும் வசனகர்த்தா ஆவார். 2002 ஆம் ஆண்டு ரெட் திரைப்படத்தையும் 2005 ஆம் ஆண்டு மாயாவி திரைப்படத்தையும் இயக்கி பிரபலமானவர் சிங்கம் புலி. பிதாமகன் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார் சிங்கம் புலி.

2009 ஆம் ஆண்டு நான் கடவுள், மாயாண்டி குடும்பத்தார் ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் சிங்கம் புலி. நடிகராக அவருக்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று அபாரமாக நடித்திருப்பார் சிங்கம் புலி.

கோரிப்பாளையம், மிளகா, தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, மனம் கொத்தி பறவை, கடல், தேசிங்குராஜா, ஜன்னல் ஓரம், ரகளபுரம் போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார் சிங்கம் புலி.

விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற மகாராஜா திரைப்படத்தில் முதன்முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிங்கம் புலி. இதைப்பற்றி தான் தற்போது ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், என்னை பார்த்து சிரிச்சவங்க எல்லாருமே நான் ஒரு படத்தில் வில்லனா நடிச்ச பிறகு பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் இனிமேல் நான் வில்லனாக நடிக்க போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். இனி முழுக்க முழுக்க நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான 3d படத்தை இயக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சிங்கம் புலி.