விக்னேஷ் சிவனால் மனஉளைச்சலுக்கு ஆளானேன்… இயக்குனர் SS குமரன் பரபரப்பு பேட்டி…

By Meena

Published:

நயன்தாரா தனுஷ் விவகாரம் பூதாகரமாக ஆகிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா தனுஷின் மீது குற்றச்சாட்டு அறிக்கை வெளியிட்ட பிறகு பலர் ஆரம்பத்தில் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தாலும் போகப்போக ஒவ்வொரு விஷயமாக வெளிவர வர அனைவரும் தனுஷின் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர்.

அதில் ஒன்றுதான் இயக்குனரும் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் ஆன எஸ் எஸ் குமரன் வெளியிட்ட முதல் எதிர்ப்பு அறிக்கையாகும். அதில் நயன்தாரா மேடம் கடந்த வருடம் உங்களுடைய கணவர் விக்னேஷ் சிவன் என்னுடைய படத்தின் டைட்டிலை திருடினாரே அதை எந்த சிவன் சன்னதியில் பதில் சொல்ல வைப்பீர்கள் என்று கேட்டிருந்தார். இந்த பிரச்சினை ஒரு வருடத்துக்கு முன்பாக நடந்தது இயக்குனர் எஸ் எஸ் குமரனும் சில பேட்டிகளை அளித்திருந்தார்.

அப்போது இந்த அறிக்கை வெளியான பிறகு மறுபடியும் ஒரு பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால் விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற டைட்டிலை என்னிடம் அபகரிக்க தான் முயற்சி செய்தார். முதலில் அவரது மேனேஜர் வந்து டைட்டிலைத் தரும் படி கேட்டார். ஆனால் நான் முடியாது என்று கூறிவிட்டேன். மறுநாள் விக்னேஷ் சிவன் எனக்கு போன் செய்து என்னுடைய டைட்டில் உங்களிடம் எப்படி வந்தது என்று பிளேட்டை அப்படியே திருப்பி போட்டார். எனக்கு ஷாக் கிவிட்டது. அதற்குப் பிறகு வழக்கு வக்கீல் என விக்னேஷ் சினால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

தனுஷ் பெரிய ஆள் என்பதால் தானே நீங்கள் இரண்டு வருடம் காத்திருந்தீர்கள். மேலும் தனுஷின் மீது நியாயம் இருந்ததால் தானே நீங்கள் காத்திருந்தீர்கள். நான் பிரபலம் இல்லை என்பதால் உங்களுடைய மிரட்டலில் மூலம் என்னை அடிபணிய வைக்க வேண்டும் என்று செய்தீர்கள். இது எந்த வகையில் நியாயம் தனுஷின் மீது தவறு இருக்க வாய்ப்பு இல்லை. மூன்று நொடியில் ஒரு விளம்பரத்தில் நீங்கள் நாடிக்கிறீர்கள் என்றால் காசு வாங்காமல் நடிப்பீர்களா அதே போல் தானே எல்லாருக்கும் என்று அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் எஸ் எஸ் குமரன்.