என் அப்பாவுக்கு அப்புறம் இந்த விஷயத்தை மாரி செல்வராஜ் சாரிடம் தான் பார்த்தேன்… துருவ் விக்ரம் பகிர்வு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் அவர்களின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின்…

Dhuruv

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் அவர்களின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். 2019 ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிப்பு மட்டுமல்லாது துருவ் விக்ரம் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு 2022 ஆம் ஆண்டு மகான் என்ற திரைப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தார் துருவ் விக்ரம்.

மகான் படத்திற்காக மிஸ்ஸிங் மீ என்ற பாடலை எழுதி பாடியுள்ளார் துருவ் விக்ரம். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் வாழை. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துருவ் விக்ரம் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசி உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து இன்று சினிமாவில் ஜெயித்து காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் சார் என்றால் அவரது கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம். என் அப்பாவிற்கு பிறகு கடினமாக உழைக்கும் ஒரு மனிதனாக நான் பார்த்தது என்றால் அது மாரி செல்வராஜ் சார் தான். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்டு இருக்கேன். அவர் எனக்கு அப்பா அம்மா ஒரு குரு மாதிரி என்று பேசி உள்ளார் துருவ் விக்ரம்.