நான் சூப்பர்ஸ்டார் ஆகணும்னு நினைக்கவில்லை… ஆனால் இது மட்டும் என் மனதில் இருக்கு… விதார்த் பேச்சு…

By Meena

Published:

2001 ஆம் ஆண்டு ‘மின்னலே’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது நண்பர்கள் மூலம் கூத்துப் பட்டரையில் சேர்ந்து நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகு ‘கொக்கி’ (2006), ‘லீ’ (2007), ‘லாடம்’ (2009) ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். கூத்துப் பட்டரையில் இவரது நடிப்பைப் பார்த்த இயக்குனர் பிரபு சாலமன் 2010 ஆம் ஆண்டு விதார்த் அவர்களை வைத்து ‘மைனா’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தின் மூலம் விதார்த் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிப் பெற்று அவரது நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார். இந்த திரைப்படத்தின் பாடல்களும் ஹிட்டானது.

அதை தொடர்ந்து முதல் இடம் (2011), கொள்ளைக்காரன் (2012), ஜன்னல் ஓரம் (2013), பட்டைய கிளப்பனும் பாண்டியா (2014), குற்றமே தண்டனை (2015), ஒரு கிடாயின் கருணை மனு (2017), குரங்கு பொம்மை (2017), ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு விதார்த் கொடிவீரன் பின்னர் நடிகை ஜோதிகாவின் கணவராக காற்றின் மொழி ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு விதார்த் நடித்த ‘இறுகப்பற்று’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டப் பின்பு பேசிய விதார்த், நான் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை, சினிமா ஒரு கலை, நான் ஒரு கலைஞர், நான் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருக்கும் என்று கூறியுள்ளார்.