பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர்.
முதல் ஆளாக சென்ற சாண்டி உணர்ச்சி பொங்கப் பேசினார். அடுத்து உள்ளேவந்த லாஸ்லியாவிடம் பிக் பாஸ் கேள்விகள் கேட்டார்.
பிக் பாஸ் வீட்டைப் பற்றிக் கேட்க, இந்த வீட்டிற்கு கேம் விளையாட வந்தேன். வீட்டிற்கு உணர்வு இருக்கிறது. அதை பல தருணங்களில் உணர்ந்தி இருக்கிறேன் என்று தழுதழுக்க கூறினார்.
இந்தவீட்டில் செய்யத் தவறிவிட்ட விஷயமாக எதனை நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு யாருடனும் கனெக்ட் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தேன். அது முடியவில்லை. ஏனெனில் கனெக்ட் ஆகிவிட்டால் அவர்களுடைய நெகட்டிவ் கூட பாசிட்டிவ் ஆக தெரிந்திவிடும். மேலும் அதனால் நான் பல இடங்களில் நேர்மையாக கதைக்கவில்லை என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.
பிக் பாஸ் அனுபவத்தினை வார்த்தையால் சொல்ல முடியாது. அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும்.
இந்த நிகழ்ச்சிக்கு முன் என்னை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், முகம் தெரியாத எனக்கு இவ்வளவு அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறினார்.