இந்த படத்துல எனக்கு மேக்கப் போட்டதை பார்த்து அழுதுட்டேன்… நெப்போலியன் பகிர்வு…

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்…

nepolean

நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன்.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நெப்போலியன். 1990 காலகட்டத்தில் பிரபலமான வில்லன் நடிகராக புகழின் உச்சியில் இருந்தார் நெப்போலியன். சின்னதாயி, ஊர் மரியாதை, முதல் சீதனம், தலைவாசல், புது பிறவி, மின்மினி பூச்சிகள், எங்க முதலாளி, கிழக்கு சீமையிலே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நெப்போலியன்.

1994 ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் நெப்போலியன். தொடர்ந்து ராஜ முத்திரை, என் பொண்டாட்டி நல்லவள், ஆகாய பூக்கள், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், கரிசக்காட்டு பூவே, மனுநீதி, தென்காசி பட்டணம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் நெப்போலியன்.

அதற்குப் பிறகு அமெரிக்காவில் சென்று செட்டிலான நெப்போலியன் அவ்வப்போது நேக்காணல்களில் கலந்து கொள்வார். அப்படி ஒரு நேர்காணலில் தனது முதல் பட அனுபவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார் நெப்போலியன். அவர் கூறியது என்னவென்றால், என்னுடைய முதல் படம் புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு 30 நாள் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். 25 நாட்கள் நான் சும்மாவே தான் இருந்தேன். 26 ஆவது நாள் எனக்கு மேக்கப் போட்டு காண்பித்தார்கள். அப்போது கண்ணாடியில் என்னை பார்த்ததும் அழுதுவிட்டேன். ஏனென்றால் எனக்கு அப்போது 27 வயது அந்த படத்திற்கு எனக்கு 60 வயது கிழவன் போல் மேக்கப் செய்திருந்தார்கள். அதை பார்த்தவுடன் என் மனதுக்கு ரொம்ப வருத்தமாகி அழுதுவிட்டேன் என்று பகிர்ந்திருக்கிறார் நெப்போலியன்.