ஆதிக் ரவிச்சந்திரனின் பிலிம் மேக்கிங்கை புரிஞ்சுக்கவே முடியல… நடிகர் பிரசன்னா ஓபன் டாக்…

பிரசன்னா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்…

rasanna

பிரசன்னா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரசன்னா.

2004 ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், அஞ்சாதே, கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், கோவா, நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

2010 காலகட்டத்திற்கு பிறகு இரண்டாம் கட்ட நடிகராக நடிக்க தொடங்கினார் பிரசன்னா. அந்த வகையில் பா பாண்டி, துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, Good Bad Ugly போன்ற திரைப்படங்களிலும் இன்னும் பல படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் பிரசன்னா.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரசன்னா Good Bad Ugly படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது ஆதிக் ரவிச்சந்திரனின் பிலிம் மேக்கிங் எனக்கு புரியவே இல்ல. Good Bad Ugly சூட்டுக்காக சென்றிருப்பேன் என்னை கூப்பிடவே மாட்டார்கள். தூங்கிக் கொண்டிருப்பேன் திடீர் என்று அழைத்து சாட் எடுப்பார் ஆதிக். அவருடைய பிலிம் மேக்கிங் எனக்கு குழப்பம் அடைய செய்து விடும். அடுத்த முறை அவருடன் இணைந்து படம் பண்ணும் போது அவருடைய ஃபிலிம் மேக்கிங்கை நன்றாக புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார் பிரசன்னா.