சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் முன்னுக்கு வந்தவர். விஜய் டிவியில் மிமிக்ரி செய்பவராகவும் தொகுப்பாளராகவும் தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.
பின்னர் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதற்கு அடுத்ததாக தொடர்ந்து காமெடி கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான சிவகார்த்திகேயன் பின்னர் கமர்சியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரெமோ எதிர்நீச்சல் சீமா ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இப்போது தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்திருந்த அமரன் திரைப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் அவரது தந்தையை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் அமரன் திரைப்படமும் எனது வாழ்க்கையுடன் அதிகமாக ஒத்துப் போகக் கூடியது. ஏனென்றால் அதன் கிளைமாக்ஸ் மாதிரி தான் எனது வாழ்க்கையிலும் நடந்தது.
என்னுடைய அப்பா போலீசாக இருந்தார். ஜெயிலில் Superintent ஆக பணிபுரிந்தார். அப்போது ஊருக்கு லீவுக்கு வரேன் அப்படினு எனக்கு காலைல போன் பண்ணி இருக்காரு ஆனா சாயங்காலமே அவரு இறந்துவிட்டார். அந்த நேரத்தில் நான் மிகவும் நொறுங்கிப் போய்விட்டேன். அந்த வலியை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. அதேபோல் தான் இந்த அமரன் கிளைமாக்ஸ் காட்சியில் நடந்தது. அதனால் இந்த படம் என் வாழ்க்கையோடு மிகவும் ஒத்து போனது என்று ஓபனாக பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.