சுந்தர் சி அவர்களிடம் கதை இல்லனா என்ன செய்வீங்கனு கேட்டேன்… இப்படி சொல்லிட்டாரு… மனம் திறந்த வடிவேலு…

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு. பிறகு நடிகர்…

vadivelu

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு.

பிறகு நடிகர் விஜய்காந்த் வடிவேலுவை பல திரைப்படங்களுக்கு பரிந்துரைத்து தூக்கி விட்டார். தனது அசாத்தியமான நகைச்சுவை மற்றும் உடல் மொழியின் மூலம் மிகவும் பிரபலமானார் வடிவேலு. இவரை வைகைப்புயல் என்றும் அழைக்கின்றனர்.

எந்த கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை சிரிக்க வைப்பதில் வடிவேலு தவறுவதில்லை. இவரது நடிப்புக்கு சான்றாக பல திரைப்படங்கள் இருக்கிறது. முன்னணி நடிகர்கள் பலர் படத்திலும் நடித்திருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் வடிவேலு அவர்கள் சுந்தர் சி யை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

வடிவேலு கூறியது என்னவென்றால், நான் சுந்தர் சி அவர்களிடம் கதை இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் அரண்மனை பாகம் 10 வரை என்னிடம் கதை இருக்கிறது. அதை எடுத்தே வாழ்க்கையை ஓட்டி விடுவேன் என்று கூறினார் என்று பகிர்ந்து இருக்கிறார் வடிவேலு.