எனக்கு இந்த விஷயம் ரொம்ப அலர்ஜி… ஸ்ரீகாந்த் பகிர்வு…

By Meena

Published:

சென்னையில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் பெரும்பாலும் நடிப்பவர். தெலுங்கு சினிமாவில் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார் ஸ்ரீகாந்த். கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் செய்து வந்ததன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஸ்ரீகாந்த்.

2002 ஆம் ஆண்டு ‘ரோஜாக்கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே நல்ல விமர்சனங்களைப் பெற்று அமைவரின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீகாந்த். அடுத்ததாக ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த்.

‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதுகளில் சிறப்பு பரிசினை பெற்றார் ஸ்ரீகாந்த். தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘போஸ்’, ‘கனா கண்டேன்’, ‘ஒரு நாள் ஒரு கனவு’, ‘பம்பர கண்ணாலே’ ‘மெர்குரி பூக்கள்’, ‘பூ’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த்.

2000 களின் நடுப்பகுதியில் சற்று பின்னடைவை சந்தித்த ஸ்ரீகாந்த், விஜயுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்ததன் வாயிலாக கம்பேக் கொடுத்தார். அதற்குப் பிறகு சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஸ்ரீகாந்த், நான் ஒரு பிராமணன் தான். ஆனால் நான் சிக்கன் சாப்பிடுற பிராமணன். எனக்கு தயிர் சாதம் என்றாலே அலர்ஜி தான். அதற்கு காரணம் நான் பள்ளியில் படிக்கும் போது பசங்க அய்யரு தயிறு அப்படினு கிண்டல் பண்ணுவாங்க. அது எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.