கீர்த்தி சுரேஷ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாய் மேனகா தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை ஆவார். இவரது தந்தை சுரேஷ் குமார் மலையாள வம்சாவளியை கொண்ட சினிமா தயாரிப்பாளர் ஆவார். இதன் மூலம் கீர்த்தி சுரேஷிற்கு சினிமா வாய்ப்புக் கிடைத்தது.
2000 களின் முற்பகுதியில் தனது தந்தை தயாரித்த மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். பின்னர் 2013 ஆம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
தொடர்ந்து தனுஷுடன் ‘தொடரி’, விஜயுடன் ‘பைரவா’, விக்ரமுடன் ‘சாமி 2’ சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக ‘அண்ணாத்த’ போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், விஜயை பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என்னை பத்தி என் குடும்பத்தை பத்தி இணையத்தில் வருகிற வதந்திகளைப் பார்க்கும் போது கஷ்டமா இருக்கும். அப்போதெல்லாம் விஜய் சார் சொன்னது தான் நியாபகம் வரும். அவர் என்கிட்டே சொன்ன விஷயம், உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகும், அதே நேரம் வதந்திகளுக்கு விளக்கம் சொன்னால் உண்மையாகும் அப்படினு சொன்னார். அதனால வதந்திகளை கண்டுக்காம அவரோட அட்வைஸை தான் நான் Follow பண்ணிட்டு இருக்கேன் என்று பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.