நடிகர் விவேக் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்துபவர் அவரே ஒரு கடுமையான டுவிட்டை வெளியிட்டிருக்கிறார் என்றால் குற்றம் செய்தவர்கள் எல்லோர் மனதிலும் எத்தகையதொரு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் எரித்து கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியை கொலை செய்த குற்றவாளிகள் குறித்து விவேக் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
எத்தனையோ நற்பண்புகள் கொண்ட இளையோர் இருக்க, இப்படியும் சில மிருகங்கள்! மன்னிக்கவும்… இவர்கள் அதை விட கீழானவர்கள். உயிர் விட்ட சகோதரி ஒரு நாளில் இறந்தார்; ஆனால் இவர்கள் சாகும் வரை தினம் இறப்பார்கள் என கூறியுள்ளார்.