அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் வலிமை படத்தில் ஹூமாவுக்கு ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் ஆக்சன் காட்சிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
குறிப்பாக இந்த படத்தில் ஹூமா, பைக் ஓட்டும் காட்சிகள் இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் சில பகுதிகளில் ஹெல்மெட் அணிந்தபடி பைக் ஓட்ட பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து வலிமை படத்தின் நாயகி ஹூமா தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்றாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது