இந்தியன் 2 படத்திற்கு கமலுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ கோடியா..?!

1996ல் வெளியான இந்தியன் படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளும், இந்தியன் தாத்தாவின் வர்மக்கலையும் நமக்குப் புதிய விஷயம். அது மட்டுமல்லாமல் ஊழல் விஷயத்தில் அன்றாடம் ஒரு சாதாரண மனிதன் சந்திக்கும் பிரச்சனையை மையக்கருத்தாக வைத்து இயக்குனர் ஷங்கர் வெகு அழகாகப் படமாக்கி இருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியான இந்தியன் 2 வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தைப் பற்றி தினம் தினம் புதிய அப்டேட்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக கமலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

அந்த சம்பளம் 150 கோடியாம். தமிழ்சினிமாவில் விஜய், அஜீத், ரஜினி, கமல் தான் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதே போல் கல்கி படத்தில் வில்லனாக நடித்ததற்கும் கமலுக்கு இதே 150 கோடி தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2
Indian 2

இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் தான் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். ‘தாத்தா வாராரு’ பாடல் வைரலாகி வருகிறது. மற்றபடி பாரா, நீலோற்பம் ஆகிய பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படத்தில் அனிருத்தின் பின்னணி இசையை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில் ஷங்கர் இந்தியன் தாத்தா மேக்கப்பிற்காக கமல் கடுமையாக உழைத்துள்ளார். அவருக்கு சாப்பாடு கிடையாது. எல்லாம் பழச்சாறு போன்ற பானங்கள் தான். அதே போல படத்தில் இந்தியன் தாத்தா வரும் சீன்கள் எல்லாமே தெறிக்கவிடும் என்றும் சொல்லி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன் 2 படம் உருவாகக் காரணமே அரசியல்வாதிகள் தான் என்று கமல் குறிப்பிட்டுள்ளார். அப்போ உள்ள லஞ்சம் இப்போ வரை தொடர்கிறது. இது தான் இந்தியன் 2 படம் உருவாக மூல காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கமல் இப்போது அரசியலில் இறங்கி அந்தப் பணியும் செய்து வருவதால் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் கண்டிப்பாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. இதுவும் படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்புக்குக் காரணமாம்.

இந்தியன் 2 படம் நீளமாக எடுக்கப்பட்டதால் அந்தக் காட்சிகளின் முக்கியத்துவம் கருதி அதை வெட்ட முடியாது என்பதாலும் இந்தியன் 3ம் பாகமும் விரைவில் வரும் என்கிறார்கள்.