மனிதன் படம் உருவானது எப்படி? டைட்டிலுக்குக் காரணமாக இருந்த கமல்..!

By Sankar Velu

Published:

சின்ன சின்ன விஷயங்களைச் சமரசம் செய்து கொள்ளாததால் சினிமா உலகிலே எத்தனை பேர் நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளார்கள் என்று நினைக்கும்போது நிஜமாகவே வருத்தமா இருக்கு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். அத்துடன் அதற்கான ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டுகிறார். என்னன்னு பார்க்கலாமா…

மனிதன் திரைப்படம் உருவாவதற்கு முன்பே ஒரு கதாசிரியரிடம் கதை கேட்டார் ஏவிஎம்.சரவணன். அவர் சொன்ன கதை ரொம்ப சிறப்பாக இருந்தது. அது ஏவிஎம். சரவணனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அந்தக் கதாசிரியர் ஒரு நிபந்தனையை ஏவிஎம். சரவணனுக்கு விதித்தார். அதாவது ‘படத்துடைய டைட்டில்ல கதை, திரைக்கதை, வசனம் என்று என் பெயர் வரவேண்டும்’ என்று சொன்னாராம்.

‘கதை, வசனம் என்று உங்கள் பெயரை நிச்சயமாகப் போடுறேன். ஆனால் நம்ம கம்பெனியைப் பொருத்தவரைக்கும் திரைக்கதையை அமைப்பதில் வல்லவர் பஞ்சு அருணாச்சலம் தான். அவர் திரைக்கதை அமைத்தால் அந்தப் படம் வெற்றி பெறும்.

அதனால் திரைக்கதைக்கு மட்டும் அவரோட பேரு போடலாம்’னு சொன்னார். அதற்கு அந்தக் கதாசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் காரணமாகத் தான் ரஜினி படத்தில் பணியாற்றும் வாய்ப்பை அவர் இழந்தார்.

Manithan
Manithan

அதன்பிறகு ஏவிஎம்.சரவணனிடம் குகநாதன் ஒரு கதையைச் சொல்ல அது அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அதற்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதினார். அதுதான் மனிதன் படம். கமலுக்கு ஒரு சகலகலாவல்லவன் போல ரஜினிக்கு அவர் ஒரு மனிதனாக வாழ்ந்து வருவதால் மனிதன் என்று ஏவிஎம்.சரவணன் பெயர் வைத்தார்.

அதை விநியோகஸ்தர்கள் பலரும் அப்போது ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது டி.கே.சண்முகம் மனிதன் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினார். அது வெற்றி பெறவில்லை. அதனால் தான் இந்த டை;டிலுக்குப் பலரும் தயங்கினர்.

அந்த சென்டிமென்ட் எல்லாம் நம்ம படத்துக்குப் பாதிக்காது என்று அவர்களுக்குத் தைரியம் ஊட்டி அந்தப் படத்திற்கு மனிதன் என்றே பெயர் வைத்தார். அது எப்படிப்பட்ட வெற்றிப்படம் என்பது எல்லாருக்குமே தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் மனிதன். ரஜினி, ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், செந்தில் உள்பட பலர் நடித்த படம். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். காள காள, மனிதன் மனிதன், முத்து முத்து, வானத்த பார்த்த ஆகிய முத்து முத்தானப் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன. இது ஒரு வெள்ளி விழா படம்.