கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ல் கடல் வழியே மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலரை சரமாரியாக சுட்டனர். இதில் பலர் பலியாகினர்.
அதோடு நிற்காமல் மும்பையின் முக்கிய ஹோட்டல்களான தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளை சுட்டுத்தள்ளினர் பாதி பேரை பணயகைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் பலத்த சண்டைக்கு பிறகே பலரை பாதுகாப்பாக மீட்க முடிந்தது. இதில் ராணுவ உயரதிகாரி, மும்பை காவல்துறையின் இன்ஸ்பெக்டர் உட்பட பலரும் பலியாகினர். இதை அடிப்படையாக வைத்து ஹோட்டல் மும்பை என்ற திரைப்படம் தயாராகி கடந்த 22ம் தேதி வெளியீட்டுக்கு வந்தது.
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இப்படம் நம் வீரர்களின் உயிர்த்தியாகத்தை போற்றுகிறது. தண்டர் ரோடு பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குனர் அண்டொனி மிராஸ் என்பவர் இயக்கியுள்ளார்.