இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றி படங்கள் அதிகம் தயாரித்த நிறுவனம்

ஒரு நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் அடுத்த படம் தயாரிக்க ஒரு வருடம் ஆகும் அல்லது சில மாதங்களாவது ஆகும். ஆனால் அது எதுவும் இல்லாமல் தொடர்ந்து வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஐசரி கணேஷ்.…

ஒரு நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் அடுத்த படம் தயாரிக்க ஒரு வருடம் ஆகும் அல்லது சில மாதங்களாவது ஆகும். ஆனால் அது எதுவும் இல்லாமல் தொடர்ந்து வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஐசரி கணேஷ்.

7e55b296cf8d076abe4870d3b2c636ce-2

இவர் முன்னாள் நடிகரும் அதிமுக கட்சிக்காரரும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ஐசரி வேலனின் மகனாவார்.

இவரின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி மூன்றும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதனைதான்.

இதற்காக சென்னையில் நேற்று விழா நடந்தது. படங்களில் நடித்த முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், உலகப் படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் எடுக்கப்படுவது பெருமையளிப்பதாக கூறினார். உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களை தருபவர்கள் தமிழ் திரையுலகினர் என பாராட்டிய முதல்வர் எம்.ஜி.ஆரை போல நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார். இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் என திரைத்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன