ஹிந்தியில் பெரும் பொருட்செலவில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் போலீஸ் படமாக அக்ஷய்குமாரை வைத்து சூர்ய வன்சி என்ற படம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரானது.
சூர்யவன்ஷி படத்தில் கத்ரினா கைஃப், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் சமீபத்தில் இந்த பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மார்ச் 24ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது.
பார்வையாளர்களின் நலன் கருதி இப்பட ரிலீசை தள்ளி வைத்துள்ளோம் இருந்தாலும் உங்களிடம் சூர்யவன்சி திரும்ப வரும் என்று தயாரிப்பு நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.