பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, பார்வையாளர்கள் அனைவரும் நாளை யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
யார் அந்த டைட்டிலுக்கு சொந்தக்காரர் என அனைவரும் வோட்டுப் போட்டு காத்திருக்க, பிக் பாஸ் அவர் இஷ்டத்துக்கு யாருக்காச்சும் தூக்கி கொடுக்காமல் இருந்தால் சரி என்று புலம்புவோர் ஒருபுறம், கவினுக்காக வோட்டு லாஸ்லியாவுக்குத்தான் என அனுதாப ஓட்டின் வெற்றியை நோக்கி எதிர்பார்த்து இருப்போர் ஒருபுறம்.
ஆரம்பம் முதலே அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கும் சாண்டிதான் பார்வையாளர்கள் மனதினை கொள்ளை கொண்டவர் என்று இவர் ஜெயிப்பார் என காத்திருக்கிறது சாண்டி ஆர்மி.
இவர்கள் யாருக்கும் சளைத்தவள் நான் இல்லை என வீ ஆர் த பாய்ஸ் டீம் டார்கெட் செய்தபோதும் உறுதியாக போராடிய பிக் பாஸ் வீட்டு ஏஞ்சல் ஷெரின் ஒருபுறம். அப்பா இப்போவே கண்ணைக் கட்டுத்துன்னு எல்லோரும் ரெடி ஆகிவிட்டனர் பைனல்ஸ்க்கு..
அப்போ யாரு வாங்குவா ? மக்கள் ஓட்டின்படி வந்தால் முகின் டைட்டிலை வெல்ல வாய்ப்புள்ளது, பிக் பாஸ் ஏமாத்து வேலை செய்ய நினைத்தால், நிச்சயம் டைட்டில் லாஸ்லியாவுக்குத்தான்.