கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர் விஜய் ஆண்டனி. இவரின் இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்பதாகும். குடும்பத்தின் வறுமையால் சவுண்ட் என்ஜினியராக தனது வாழ்க்கையை தொடங்கி இசையமைப்பாளர் ஆனவர் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட தொகுப்பாளர், பாடலாசிரியர், ஆடியோ பொறியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் இசையமைத்தார்.
2006 ஆம் ஆண்டு ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்தார். இசையமைத்துக் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார் விஜய் ஆண்டனி.2012 ஆம் ஆண்டு ‘சலீம்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
2016 ஆம் ஆண்டு ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ‘திமிரு பிடிச்சவன்’, ‘பிச்சைக்காரன் 2’ போன்ற திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை கொண்டவர் விஜய் ஆண்டனி.
ஊடகம் மற்றும் திரைத்துறையில் நுழைந்தப் பின்பு தனது பெயரை ஆரம்பத்தில் ‘அக்னி’ என்று வைத்துத்திருந்தார் பின்னர் விஜய் ஆண்டனி என்று வைத்துக் கொண்டார். அதற்கான காரணத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறுகையில், என்னோட பெயர் ஆண்டனி மட்டும் தான். பெயர்ல மதம் பார்ப்பாங்க அதனால பெயரை மாத்திக்கோங்க அப்படினு SA சந்திரசேகர் சார் சொன்னார். அதனால நான் ‘அக்னி’ அப்படினு வச்சுக்கிட்டேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் இந்த பெயரும் நல்லா இல்லை விஜய் ஆண்டனினு வச்சுக்கோனு இந்தப் பெயரை SA சந்திரசேகர் தான் வச்சார் என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.