ராதாரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான குணச்சித்திர மற்றும் துணை நடிகர் ஆவார். இவரது தந்தை எம் ஆர் ராதா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராவார். மேலும் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷா இவரது சகோதரிகள் ஆவர். 1977 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராதாரவி.
தொடர்ந்து பொய்க்கால் குதிரை, மதுரவீரன், அண்ணாமலை, பூமகள் ஊர்வலம், மருது, அரண்மனை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராதாரவி. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராதாரவி.
வயது முதிர்ந்த போதும் இன்றளவும் ஓயாமல் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார் ராதாரவி. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ராதாரவி சினிமாவில் தான் நுழைந்தது எப்படி மற்றும் தனக்கு கடவுள் இவர் தான் என்று கூறியிருக்கிறார். அதைப் பற்றி இனி காண்போம்.
ராதாரவி கூறியது என்னவென்றால், நான் MR ராதா மகன் என்பதால் எல்லாம் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். எனக்கு முதன்முதலாக வாய்ப்பு கொடுத்தது டி ராஜேந்தர் தான். அவர் தான் எனக்கு சினிமாவில் கடவுள் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ராதாரவி.