GOAT திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு பிரம்மாண்டமாக இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் மிகுந்த பொருட்செலவு செய்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளதாகவும் மற்றும் பல சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்து இருந்தது.
அதன்படி கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்ப மூலம் மீண்டும் கொண்டு வந்து மிகச் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலாக சிவகார்த்திகேயனும் தோன்றி இருப்பார். இந்த படத்தின் ஒரு பாடலில் திரிஷா நடனமாடி இருப்பார் என பல சர்ப்ரைஸ் எலமென்ட்களை இந்த திரைப்படத்தில் சேர்த்து இருந்தனர். இது நடிகர் விஜயின் 68வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இந்தத் திரைப்படத்தில் முக்கியமாக பார்க்கப்பட்டது நடிகர் விஜய் வயதான தோற்றத்திலும் இளம் வயது விஜய் என இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டி இருப்பார். படம் வெளியான முதல் நாளே உலக அளவில் 126 கோடி வசூலித்து கோட் திரைப்படம் சாதனை படைத்திருக்கிறது. AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்த் அவர்களை திரும்ப கொண்டு வந்ததை பற்றி மக்கள் பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு டப்பிங் பேசியது யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகி வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன் அவர்கள் தான். இந்த விஷயம் பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியிருப்பது அனைவருக்கும் சற்று சர்ப்ரைஸ் ஆன நியூஸாக இருக்கிறது.