நானும் இவரும் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து தெருத் தெருவா டான்ஸ் ஆடிட்டு இருக்கோம்… ரெடின் கிங்ஸ்லி பகிர்வு…

By Meena

Published:

நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி தனித்துவமான முகபாவனை மற்றும் சத்தமாக பேசும் பாணியில் பிரபலமானவர். ரெடின் ஆரம்பத்தில் ஒரு நடனக் கலைஞராக இருந்தார் மற்றும் அவள் வருவாளா (1998) திரைப்படத்தில் ஒரு பாடலில் இடம்பெற்றார்.

அவர் நடிகராக திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு சென்னை மற்றும் பெங்களூருவில் நடந்த அரசு கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராகவும் இருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த வேட்டை மன்னன் என்ற 2016 ஆம் ஆண்டு உருவான அவரது முதல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2018 இல், மீண்டும் நெல்சன் இயக்கிய நயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் தோன்றினார்.

ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய பிறகு, கிங்ஸ்லி 2021 இல் நெற்றிக்கண் மற்றும் டாக்டரில் நடித்ததைத் தொடர்ந்து புகழ் பெற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் அன்னத்தே (2021) மற்றும் விஜய்யின் பீஸ்ட் (2022) ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். வடிவேலுவின் நகைச்சுவைப் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்தார்.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து நடிப்பில் பிஸியாக உள்ளார் ரெடின் கிங்ஸ்லி. தற்போது ஒரு பிரபல யூ- டியூப் சேனல் அவருக்கு ‘2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காமெடியன்’ என்ற விருதை வழங்கியுள்ளது. அந்த விருதை டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் வழங்கினார். மாஸ்டர் ஸ்ரீதர் ரெடின் கிங்ஸ்லி மாதிரி உழைப்பாளியை பார்க்க முடியாது. அவரது விடாமுயற்சியால் இந்த இடத்தில் இருக்கிறார் என்று கூறினார்.

ஸ்ரீதரைப் பற்றி ரெடின் கிங்ஸ்லி கூறுகையில், நானும் ஸ்ரீதரும் ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக பயணிப்பவர்கள். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே எங்களுக்கு டான்சில் விருப்பம் அதிகம், தெரு தெருவாக டான்ஸ் ஆடிட்டு இருக்கோம் என்று ஸ்ரீதர் உடனான நட்பை மேடையில் பகிர்ந்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி.