ஆஸ்கர் அகாடமி ஸ்க்ரிப்ட் நூலகத்தில் இடம் பெற்ற ஹரிஷ் கல்யாணின் படம்… நெகிழ்ச்சி பதிவிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்ட ஹரிஷ்…

By Meena

Published:

ஹரிஷ் கல்யாண் தனது 20வது வயதில் இருந்தே சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பொறியாளன் (2014), வில் அம்பு (2016) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்துக் கொண்டதன் மூலமாக பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 1 இல் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஹரிஷ் கல்யாண், தனது நிதானமான குணத்தை வெளிப்படுத்தி மக்களை குறிப்பாக இளம் பெண்கள் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அடுத்தடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 2018 ஆம் ஆண்டு அதே பிக் பாஸ் சீசன் 1 இல் சக போட்டியாளரான ரைசா வில்சனுடன் இணைந்து ‘பியார் பிரேம காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

2019 ஆம் ஆண்டு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, அதே ஆண்டு ‘தனுசு ராசி நேயர்களே’, 2020 ஆம் ஆண்டு ‘தாராள பிரபு’, 2021 ஆம் ஆண்டு ‘ஓ மணப் பெண்ணே’, 2023 ஆம் ஆண்டு ‘பார்க்கிங்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

2023 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படமான ‘பார்க்கிங்’ திரைப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு நல்ல விமர்சனங்களைப் பெற்று வணீக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. எம். எஸ். பாஸ்கர் அவர்களின் அபாரமான நடிப்பும் இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது.

இந்நிலையில், தற்போது ஆஸ்கர் ஸ்க்ரிப்ட் லைபிரேரியில் பார்க்கிங் திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது என நெகிழ்ச்சியான ஒரு பதிவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிச் செல்லும். பார்க்கிங் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.