திரௌபதி திரைப் படத்திற்கு வரிவிலக்கு தர வேண்டும்: அர்ஜூன் சம்பத்

ஜி மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று அரசியல்வாதிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்பட பலர்…


63d346da9fc14061f56a23c7982c3d1e

ஜி மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று அரசியல்வாதிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்பட பலர் கண்டு ரசித்தனர்

இந்த படம் குறித்து ஹெச் ராஜா கூறியபோது ’பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் திரௌபதி என்றும் நாடக காதலால் பெண் குழந்தைகள் சீரழிவது இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது என்றும், இது ஒரு நல்ல சமூக கருத்துள்ள திரைப்படம் என்று கூறியுள்ளார்

இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த அர்ஜூன் சம்பத், ‘இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் சமூக கருத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன