இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகியான ஒரு மனைவி சைந்தவி இருவரும் பிரிய போதாது அதிகாரபூர்வமாக நேற்று இரவு அறிவித்து விட்டனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவை இன்னொரு பிரபல ஜோடி பல வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த நிலையில் திடீரென பிரிவை அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு:
ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து வந்த நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் எப்போது டார்லிங் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார் அந்தப் படத்திலிருந்து சைந்தவிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு வந்ததாகவும் இருவரும் ஒன்றாக இணைந்து பாடகருக்கு காரணமே அதுதான் என்றும் கூறுகின்றனர்.
திராவிட அரசியல் கருத்துக்களில் ஜி வி பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளாக ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஜிவி பிரகாஷின் மாமியார் சனாதன அரசியலில் அவரை மாற்ற முயற்சித்தது தான் காரணம் என்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை சமீபத்தில் ஜிவி பிரகாஷ் சந்தித்தது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டது சைந்தவியின் அம்மாதான் என்றும் அது ஜிவி பிரகாசுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் தொடர்ந்து வீட்டில் சண்டை நடந்து வந்தது. அதன் உச்சக்கட்டமாகத்தான் இந்த விவாகரத்து முடிவு என பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
பள்ளிப் பருவத்திலிருந்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி காதலித்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2020-ஆம் ஆண்டு இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அழகாக அன்வி என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சினிமா ஷூட்டிங்கிலேயே ஜிவி பிரகாஷ் தங்கி வருவதால் மேலும், பிரச்சனை வெடித்து இருவரும் பிரிய முடிவு செய்து விட்டதாகவும் தளபதி விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமாதானம் ஆகவில்லை என சபீதா ஜோசப் கூறியுள்ளார்.