ஒரு காலத்தில் மென்மையான இயக்குனராக அறியப்பட்டவர் எழில்.துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
ஒரு கட்டத்தில் சிறு இடைவெளிவிட்டு தீபாவளி இயக்கினார் அது போதிய வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் மனம் கொத்தி பறவை படத்தை இயக்கினார். இப்படம் காமெடியாக இருந்ததால் மிக சிறப்பாக ஓடியது. அதற்கு பிறகு காமெடி பாதையை தேர்ந்தெடுத்த எழில், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெள்ளக்கார துரை, சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கினார்.
இப்போது ஜிவி பிரகாஷ்குமாரை வைத்து ஆயிரம் ஜென்மங்கள் படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படம் ரிலீஸாகிறது.