வெடித்த சண்டை.. ஆணவத்தில் செந்தில் சொன்ன வார்த்தை.. கோபத்தில் கவுண்டமணி செஞ்ச காரியம்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் – நடிகைகள் காம்போ, நடிகர் – இயக்குனர் காம்போ, இயக்குனர் – இசையமைப்பாளர் காம்போ என நிறைய ஹிட் லிஸ்ட்கள் இருக்கலாம். ஆனால், இதில் யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமா கண்ட சிறந்த காம்போ என்றால் அது நிச்சயம் காமெடியில் கலக்கிய கவுண்டமணி – செந்தில் காம்போ தான்.

கவுண்டமணிசெந்தில்

இருவரும் தனித்தனியாக நடித்து ஹிட் கொடுத்த காமெடி காட்சிகளை விட, இணைந்து நடித்து பெயர் எடுத்தவை தான் அதிகம். கரகாட்டக்காரன், ஜென்டில் மேன், சின்ன கவுண்டர் என எக்கச்சக்க திரைப்படங்களில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், இன்று வரையிலும் பல எவெர்க்ரீன் காமெடி காட்சிகளும் மக்கள் மூலம் ரசிக்கப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழலில், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக வெளியான தகவல், தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. கவுண்டமணி – செந்தில் காம்போவில் உருவான காட்சிகள் தொடர்ச்சியாக ஒரு காலத்தில் ஹிட்டடித்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு முறை தெரியாமல் கவுண்டமணியிடம், ‘நான் இல்லாமல் உங்களால் தனியாக காமெடி செய்ய முடியாது’ என செந்தில் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

கோவால் வந்த பிரச்சனை

அவர் அப்படி சொன்னதும் கவுண்டமணிக்கு அது ஒரு ஈகோ பிரச்சனையாகவும் மாறி விடுகிறது. இதன் பின்னர் ஒரு கட்டத்தில், தனியாக காமெடி காட்சிகளில் நடிப்பதையும் சவாலாக எடுத்துக் கொண்டு யார் அதில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம் என்றும் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கவுண்டமணி தனியாக முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ஹிட்டாவதுடன் அவரது காமெடி காட்சிகளும் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது.
Goundamani, Senthil

ஆனால் இன்னொரு பக்கம், செந்தில் தனியாக நடித்த காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு பெயர் எடுக்கவில்லை. மேலும், அவருக்கு பல பிரபலங்கள் பக்க பலமாக இருந்து வாய்ப்பு கொடுத்தும் அதிக அளவில் அவை மக்கள் மனதை கவரவில்லை. இதனால், தான் சொன்னது போல தனியாக நடித்து ஹிட் கொடுக்கவில்லை என்ற உண்மையும் புரிந்து விடுகிறது.

அதே நேரத்தில் கவுண்டமணியின் காமெடி காட்சிகளை பார்த்த ரசிகர்கள், செந்திலை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் செந்திலுக்கு தகவல் போய் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் நேரடியாக கவுண்டமணியிடம் விஷயத்தை சொல்லி மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கத் தொடங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.