சமூகவலைதளங்களுக்கு குட் பை… தொகுப்பாளினி ரம்யா எடுத்த முடிவு!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ரம்யா, கலக்கப்போவது யாரு?, ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளைத்…

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ரம்யா, கலக்கப்போவது யாரு?, ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது, ஓகே கண்மணி, வனமகன், கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் துணை நடிகையாக, மங்காத்தா, மொழி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

75d6ef28c9c96aacd5bfaca1628180ff

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் 10 நாட்களில் விவாகரத்திற்கு அப்ளை செய்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். தற்போது உடல் பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ் சொல்லுதல், சமைத்தல், போட்டோஷுட் என தன்னுடைய யுடியூப் சேனலில் பிசியாக இருந்துவருகிறார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடும் அவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CAlAi65nEol/

அதாவது அவர் பதிவிட்டுள்ளதாவது, “சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். லாக்டவுனின் கடைசி வாரத்தை மெதுவாக கழிக்க நினைக்கிறேன். நான் நலமாக இருக்கிறேன், யாரும் கவலை கொள்ள வேண்டாம். சிறிய இடைவேளைக்குப் பின்னர் சந்திக்கிறேன்.” என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஷாக்கில் இருந்து மீள முடியாமல் ரசிகர்களோ விடாப்பிடியாய் ஏன்? என்ன ஆச்சு? என்று கேட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன