அஜீத் சில வருடங்களாகவே சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பொதுவாக நடிகர்கள் இது போல நடிப்பதை விரும்ப மாட்டார்கள் யங் லுக்காகவே திரையில் தெரிய விரும்புவார்கள். மூத்த நடிகர்கள் கூட வயதானாலும் யங் லுக்காகவே திரையில் தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் அஜீத் இதைப்பற்றிய கவலையில்லாமல் மாறாக இந்த சால்ட் அண்ட் பெப்பரையே தனது ஸ்டைலாக மாற்றிக்கொண்டார்.
அஜீத் மிக யூத்புல்லாக நடித்த பழைய படங்கள் அனைத்தும் நமக்கு தெரியும் ரொம்ப சூப்பரா இருப்பார்.
ரொம்ப வருஷத்துக்கு பிறகு பழைய அஜீத்தாக மாறி வந்திருக்கிறார். அவரின் யூத்புல்லான படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இது அடுத்து நடிக்க போகும் ஹெச். வினோத் படத்துக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது