சிம்புவுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் AAA. இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தில் ஸ்கிரிப்ட் முழுவதும் மாற்றப்பட்டு விட்டது. காரணம் சிம்புதானாம். அவருடன் இணைந்து ஆதிக்கால் பணிபுரியமுடியவில்லையாம். அதனால் அடிக்கடி ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டதாம். இதனால் படமும் நினைத்தமாதிரி வரவில்லை.
தோல்வியைத் தழுவியதாம். ஆனால் குட் பேட் அக்லியில் அஜீத்குமார் கதாபத்திரம் கேங்ஸ்டர். இது AAA-இல் எடுக்க முடியாமல் விடப்பட்ட உண்மையான கேங்ஸ்டர் பாத்திரம். அந்த வகையில் நினைத்தபடி ஆதிக் ரவிச்சந்திரன் கதையை எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார். ரசிகர்கள் தற்போதைய சூழலில் நம்பத் தயாராக இல்லை என்றாலும் இதுதான் 100 சதவீதம் உண்மை என்கிறார்கள் படக்குழுவினர்.
சிம்புவின் AAA படத்துக்காக ஆதிக் பல திட்டங்களை வைத்து இருந்தாராம். ஆனால் சிம்புவும் அவரது இக்கட்டான சூழலுமே அப்படி எடுக்க முடியாமல் ஆக்கிவிட்டதாம். இந்த வாரம் குட்பேட் அக்லியின் 2வது சிங்கிள் வர உள்ளது. இந்தப் படம் மெகா ஹிட் அடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் அஜீத் அடுத்ததாக விஷ்ணுவர்த்தன், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரிடமும் கதை கேட்டுள்ளாராம். ஆனால் எந்தப் படம் முதலில் வரும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இப்போதைக்கு இல்லை. ‘ஓஜி சம்பவம்’ என்ற பெயரில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடலை ஜிவி.பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளனர். பாடலை எழுதியவர் விஷ்ணு எடவன். இது கடந்த 18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.