அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷுட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2025-ம் வருடம் அஜித் வருடம் தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விடாமுயற்சியின் டீசரே ரசிகர்களைப் புல்லரிக்க வைத்த நிலையில் அடுத்து வரும் டிரைலருக்காக காத்திருக்கின்றனர். டீசரில் வசனமே பேசாத அஜீத், டிரைலரில் என்ன சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் அஜீத்தின் அடுத்தபடமான குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரே ரசிகர்களைக் கவர்ந்தது. புஷ்பா படத்தினைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தான் குட் பேட் அக்லி திரைப்படத்தினையும் தயாரிக்கிறது. எனவே பிரம்மாண்டத்திற்குப் பஞ்சம் இருக்காது. இதுமட்டுமன்றி ஏற்கனவே மார்க் ஆண்டனி மூலம் கமர்ஷியல் வெற்றி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி திரைப்படத்தினையும் அஜித் ரசிகர்களுக்காகவே இன்னொரு மங்காத்தாவாக செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
சூர்யா 45 இல் இணையும் முன்னணி நடிகர்… யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…
இப்படத்திற்கு இசையமைப்பவர் ஜி.வி. பிரகாஷ்குமார். ஏற்கனவே தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே கிரீடம் படத்தில் அஜித்துடன் பணிபுரிந்த ஜி.வி.பி. அந்தப் படத்தில் வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்திருந்தார். இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக அஜீத்துடன் இணைந்திருக்கிம் ஜி.வி.பிரகாஷ்குமார் ரசிகரின் குட் பேட் அக்லி குறித்த அப்டேட்டிற்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற Celebration of Life BGM போல குட் பேட் அக்லி-யில் இன்னொரு BGM கேட்க தயாராக இருங்கள் என்று பதில் அளித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் ஆயிரத்தில் ஒருவன் பின்னணி இசை மிகவும் புகழ்பெற்றது. இந்த இசையைக் கேட்டாலே உடலெல்லாம் ஒரு கனம் புல்லரிக்க வைப்பது நிஜம். இதேபோன்ற ஒரு இசையை மீண்டும் குட் பேட் அக்லி-யில் புகுத்தியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.