தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் கொரியோகிராபராக பணியாற்றி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றிய இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அங்கு மிகச் சிறந்த பொழுதுபோக்காளராக இருந்ததோடு தன்னுடைய கேலி, கிண்டலால் சில பிரச்சினைகளையும் சந்தித்தார். மேலும் தன் இரண்டாவது மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா குறித்துப் பேசி மிகவும் பிரபலமானார்.
செல்லப்பெயராக வைக்கப்பட்ட லாலா என்ற பெயரே அவரது பெயராகிப் போகும் அளவு லாலா குட்டியினைப் பற்றி பல நேரங்களில் சாண்டி பேசியுள்ளார். சாண்டி எந்த அளவு ஃபேமசோ அதே அளவு, லாலாவும் ஃபேமஸ் என்றே சொல்லலாம். லாலாக்குட்டி இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாளுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை வாரி இறைத்துள்ளனர். மேலும் சாண்டி ட்விட்டரில் மிகவும் உருக்கமாக, “கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்” என்று பதிவிட்டு பிறந்த குழந்தையாக இருக்கும் லாலாவின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். அவரது புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.