ஜெனிலியா தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட்டிலும் தொடர் படவாய்ப்புகளைப் பெற்ற நடிகையாக வலம் வந்தார். நடிகைகள் பெரும்பாலும் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் தென் இந்திய மொழிப் படங்களில் இருந்து ஒதுங்கி விடுவது வழக்கம், ஆனால் இவரோ அங்கும் இங்கும் என தலைகாட்டி வந்தார்.
இவர் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் சினிமாவில் நடித்த இவர் முன்னணிக் கதாநாயகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.
பாய்ஸ், சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் அதிக அளவிலான தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலேயே நடித்துள்ளார்.
குறைந்த படங்களே நடித்தாலும், இவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படக் காரணம் இவரது குழந்தைத் தனமான நடிப்பிற்காகத்தான். இவர் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது மலையாள திரைப்படமான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நடிகை ஜெனிலியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார்.