பாதுகாப்பு கேட்டு காயத்ரி ரகுராம் மனு

சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோவில் சிலைகள் அசிங்கம் என்ற வகையில் பேசினார். இதற்கு இந்து அமைப்புகள், இந்து உணர்வாளர்கள் பலரிடம் இருந்து…

சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோவில் சிலைகள் அசிங்கம் என்ற வகையில் பேசினார்.

62759080a1d1c84bd6707576d141cbdd-1

இதற்கு இந்து அமைப்புகள், இந்து உணர்வாளர்கள் பலரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் , நடிகை காயத்ரி ரகுராம் ஒரு டுவிட் ஒன்றை இட்டார் அதில் அவர் திருமாவளவனை செருப்பால் அடியுங்கள் என்று டுவிட் இட்டார் மேலும் 27ம்தேதி தன்னை நேரில் சந்தித்து தைரியமாக பேச முடியுமா என கேட்டிருந்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் இந்த சம்பவத்தை எதிர்த்து காயத்ரி வீடு முன் போராட்டம் நடத்தினர். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினர்.

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த காயத்ரி ரகுராம், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசிகள் மூலம் மர்மநபர்கள் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு வெளியிலும் மர்மநபர்கள் உலாவுவதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன