ரசிகர்களுக்கு மனம் உருகி நன்றி சொன்ன கவின்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.    இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அதில் கவினுக்கு கேம் சேஞ்சர் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதாவது அவர் ஆட்டத்தினை விட்டு வெளியேறாமல்…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.   

இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அதில் கவினுக்கு கேம் சேஞ்சர் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதாவது அவர் ஆட்டத்தினை விட்டு வெளியேறாமல் இருந்தால், ஆட்டத்தின் நிலை மாறியிருக்கலாம் என்று கமல் ஹாசன் கூறினார்.

9bc1a7b62c6b3494d5581ea12c9eea44

வெளியேவந்த கவின், இதுகுறித்து நன்றிகள் தெரிவிக்கும்விதமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். “நான் உண்மையாக இருக்க விரும்பினேன், அதன்படி முடிந்த அளவு இருக்கவே செய்தேன்.

நான் பணம் மற்றும் சிறிதளவு புகழை மட்டுமே எதிர்பார்த்தேன். எனக்கு தனிப்பட்ட் ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால்தான் நான் பல நேரங்களில் சிறப்பாக செயல்படவில்லை.

நான் திட்டமிட்டபடிதான் விளையாடினேன், ஆனால் யார் மனதையும் யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்தேன், ஆனால் அது நிகழ்ச்சியின்போக்கில் முடியாமல் போனது.

என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள், யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நான் அதனை விளையாட்டாகவே செய்தேன் என்று கூறினார்.

மேலும் ரசிகர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் தேவை என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன