நடிகர் சித்தார்த் நடித்து வரும் டக்கர் என்ற திரைப்படத்திற்காக சமீபத்தில் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா பாடிய பாடல் ஒன்று வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்நிலையில் சிம்பு, ஆண்ட்ரியாவை அடுத்து டக்கர் படத்திற்காக அவர் இயக்குநர் கௌதம் மேனனும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சித்தார்த் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக கவுதம் மேனன் இந்த பாடலை பாடி உதவி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலை பாடியதற்காக அவர் சம்பளம் எதுவும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சித்தார்த், யோகிபாபு, திவ்யன்ஷா, அபிமன்யூ சிங், விக்னேஷ் காந்த், ராம்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.