பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக கடனில் மூழ்கி இருந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும், அவரது இயக்கத்தில் வெளியான ’தலைவி’ என்ற வெப்சீரிஸ் பெற்ற ஒரே ஒரு வெற்றி அவரை அனைத்து கடன்களில் இருந்து மீட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது
தலைவி வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனம், கௌதம் மேனனுக்கு பேசிய தொகையை விட அதிகமாக சம்பளம் கொடுத்தது மட்டுமின்றி இதேபோல் இன்னொரு தொடரை இயக்கி தருமாறும் அதற்கான சம்பளம் ரூபாய் 20 கோடி ரூபாய் தருவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாம்
இதனை அடுத்து இதுவரை கடனில் மூழ்கி இருந்த கவுதம் மேனன் அனைத்து கடனில் இருந்தும் மீண்டு, தற்போது புது உற்சாகத்துடன் இந்த ஆண்டிலிருந்து இயக்கும் பணியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது