சுந்தர்.சி. தயாரித்து இயக்கி நடிக்கும் படம் கேங்கர்ஸ். நகரம், தலைநகரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்துள்ளார் சுந்தர்.சி. படம் முழுக்க காமெடி தெறிக்க விடுகிறது. இது டிரெய்லரைப் பார்த்தாலே தெரிகிறது. சி.சத்யா இசை அமைத்துள்ளார். இதற்கான டிரெய்லர் நேற்று வெளியானது. படத்தில் கேத்ரின் தெரசா தான் ஹீரோயின். வாணி போஜன், பகவதி பெருமாள், மைம் கோபி, சிங்கம்புலி, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, முத்துக்காளை உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி. ஒரு பள்ளியில் பிடி.மாஸ்டராக சேர்கிறார். அங்கு ஏற்கனவே ஒரு பிடி மாஸ்டர் உள்ளார். அதுதான் வடிவேலு.
அவர் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வந்தவர். சுந்தர்.சி. அவருடன் கால்பந்து விளையாடும்போது பந்தோடு சேர்ந்து வடிவேலுவும் பறப்பது பழைய காமெடியை நினைவுபடுத்துகிறது. சுருதி அவனுக்கு என்னை மாதிரி கர்லிங் ஹேர் கிடையாதுல்ல… டோமரா என சொல்லும் வடிவேலுவின் காமெடி இந்தப் படத்தில் எடுபடும் என தெரிகிறது. அதே போல கோடி கணக்குல கொடுக்குறதா சொன்னா குரங்கு வித்தையில இருந்து குறளி வித்தை வரைக்கும் காட்டுவேன்… என்று வடிவேலு பேசுவது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதே போல கேங்கர்ஸ்னு ஒரு தடவை சொல்கிறார் வடிவேலு. அண்ணேன் கேங்ஸ்டர்ஸ்னு தானே இருக்குன்னு ஒருவர் சொல்ல, அதுதான் இருக்குல்ல. நாம கேங்ஸ்டர்ஸ்னு புதுசா ஒண்ணை ஓப்பன் பண்ணுவோம் என்கிறார் வடிவேலு. அதே போல டிரெய்லரின் இறுதியில் வில்லன் ஒருவர் ஒரு வயதான மேக்கப் போட்ட வடிவேலுவின் கையைத் தடவிப் பார்த்து கை யங்கா இருக்கு. ஆனா மூச்சு முட்டுற வயசு இருக்குன்னு கேட்குறார்.
அதற்கு அது கழுத்துக்குக் கீழே யோகா பண்றேன்ங்கன்னு சொல்கிறார் வடிவேலு. படம் முழுக்க இப்படி அதகள காமெடி நிரம்பி வழிகிறது. இந்தப் படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வருகிறது.