கல கல படங்களை தந்த கங்கை அமரன்!

By Staff

Published:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பல்வேறு பரிணாமங்களில் தனது சினிமா வளர்ச்சியை கொண்டு சென்றவர் கங்கை அமரன்.

5dc14e0f4268ffda5331e723692024e1

இசைஞானி இளையராஜாவின் சகோதரராக அறியப்பட்டாலும் தனது தனிப்பட்ட முயற்சிகளால் பல்வேறு சாதனைகளை படைத்தவர்.

தர்மதுரையில் வரும் ஆணென்ன பெண்ணென்ன என்ற தத்துவப்பாடல் உட்பட எண்ணற்ற பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்.

இசையமைப்பில் வாழ்வே மாயம், ஜீவா, சின்னத்தம்பி பெரியதம்பி என கலக்கியவர் கங்கை அமரன்.

ஜோடி, வில்லுப்பாட்டுக்காரன் உட்பட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

எல்லாவற்றையும் விட சிறந்த கலகலப்பான திரைக்கதை அமைப்பதில் இவரை மிஞ்ச ஆளில்லை. அந்த அளவு சிறப்பான திரைக்கதையாலும் கலகலப்பான கதையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுவார். அப்படியாக ஜெயித்ததுதான் கரகாட்டக்காரன் திரைப்படம்.

கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊருவந்து, கோவில் காளை, சின்னவர் என பல கல கல படங்களை இயக்கி கலக்கியவர்.

இவரின் படங்களின் முக்கிய ஜீவன், கவுண்டமணி செந்தில் காமெடியும், இளையராஜாவின் இசையும்தான்.

இப்போது இவரது வழியில் இவர் மகன் வெங்கட் பிரபுவும் தனது படங்களை கலகலப்பு படங்களாக கொண்டு செல்ல முயற்சி செய்வது பாராட்டுக்குரியது.

Leave a Comment