இனிமேலாவது திருந்துங்கள் இயக்குனர் நவீனுக்கு ஜி மோகன் டுவிட்

மூடர் கூடம் இயக்குனர் நவீன் மற்றும் திரெளபதி இயக்குனர் மோகன் ஆகிய இருவரும் அவ்வப்போது திரெளபதி படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் மோதிக் கொண்டனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது திரெளபதி…

மூடர் கூடம் இயக்குனர் நவீன் மற்றும் திரெளபதி இயக்குனர் மோகன் ஆகிய இருவரும் அவ்வப்போது திரெளபதி படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் மோதிக் கொண்டனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது திரெளபதி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜி மோகனின் கை ஓங்கி உள்ளதாக தெரிகிறது. அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

நவீன் அவர்களே, நீங்கள் திரெளபதி படத்தை பார்த்து நீங்கள் கூறும் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன். உங்கள் தவறை இப்போது ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .. கண்ணீர் விட்டபடி பாராசூட் மூலம் உயரத்தில் பறக்காதீர்கள் .. விபத்து ஏற்படக்கூடும் .. இனிமேல் கவனமாக இருங்கள் சகோதரரே .. என்று ஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பா ரஞ்சித் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஜி மோகன், தற்போது இயக்குனர் நவீனையும் வலிய வம்புக்கு இழுத்துள்ளது அந்த படத்தின் புரமோஷனாக பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன